Cooking Vessels : எந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடல் ரீதியான பிரச்சனை வராது?
நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் இல்லாமல் எளிதாக சமைக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த நான் ஸ்டிக் பேனில் டேஃப்ளான் என்ற கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இதில் சமைத்து சாப்பிடும் போது வயிற்று பிரச்சினை, தைராய்டு போன்ற பிரச்சினைகள் வரலாம் என கூறப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅலுமினிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால், சுவாச கோளாறு, காச நோய் போன்ற பல பிரச்சைகளை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. முடிந்த வரை அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் போது, அதில் இருக்கும் இரும்புச்சத்து உடலுக்கு கிடைக்கலாம். இரத்த சோகை நோய் ஏற்படாமலும் தடுக்கலாம். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லதாக இருந்தாலும் துருப்பிடித்த பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு கேடு விளைவிக்கலாம்.
வெண்கல பாத்திரத்தில் சமையல் செய்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன் சாப்பாடும் சுவையாக இருக்குமாம். அதே போல், சமைத்து முடித்த உடன் இந்த பாத்திரத்தை நன்கு கழுவி வெயிலில் காயவைத்த பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
சமைப்பதற்கு ஓரளவு ஏற்ற பாத்திரம் என்றால், ஸ்டீல்தான் (Stainless Steel) அதாவது எவர் சில்வர் பாத்திரம். இது இரும்பு, கார்பன், நிக்கல் போன்ற மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு எந்த வகையான தீங்கும் ஏற்படுத்தாது என சொல்லப்படுகிறது.
சமையல் சமைக்க சிறந்த பாத்திரம் என்றால் அது மண் பாத்திரங்கள் தான். இதில் சமைத்து சாப்பிட்டால் உணவு சுவையாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -