Bread Jamun:அட்டகாசமான பிரட் குலாப் ஜாமுன் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 4 , பால் - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, குங்குமப்பூ, ரோஸ் எசன்ஸ், சர்க்கரை - 1 கப், தண்ணீர் - 1 1/2 கப், எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி பிரட் துண்டுகளை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை, ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், குங்குமப்பூ சேர்த்து பாக கைது எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகள் சேர்த்து அதில் பாலை ஊற்றி மாவாக நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
கடைசியாக பிரட் ஜாமுன்களை சர்க்கரை பாகில் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து பரிமாறினால் சுவையான பிரட் ஜாமுன் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -