Mind Diet : 21 நாட்களில் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்ற இதை செய்யுங்க!
உடலை குறைக்க சில உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவோம். அதுபோல், மனதை ரிலாக்ஸாக ஒருவிதமான டயட்டை மேற்கொள்ள வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலையில் எழுந்தவுடன் உங்களுக்கு நீங்களே நேர்மறையாக பேசிக்கொள்ளுங்கள். “ என் வாழ்கை என் கையில்தான் உள்ளது”, “நடப்பவை அனைத்தும் நல்லதிற்கே” போன்ற வாசகங்களை சொல்ல வேண்டும்.
சமூக வலைதள பக்கங்களில் அதிக நேரம் செலவிட வேண்டாம். உங்களிடையே தாழ்வு மனப்பான்மையை கொண்டு வரும் கணக்குகளை பின்பற்றுவதை தவிர்க்கவும். உங்களுக்கு பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவிடுங்கள்
இந்த 21 நாட்களுக்கு செய்திகளை டிவியிலோ, செய்தித்தாளிலோ படிப்பதை தவிர்க்கவும். இப்படி செய்வதன் மூலம் எந்த செய்தி நம்மை வந்து சேர வேண்டும் என்பதை நம் கட்டுக்குள் கொண்ட வர முடியும்
உங்களை வளர்த்துக்கொள்ள தினமும் 2 மணி நேரத்தை ஒதுக்குங்கள். புத்தகம் வாசிக்கலாம், பாட்காஸ்ட் கேட்கலாம். உங்களை இன்ஸ்பயர் செய்யும் விஷயங்களை செய்யுங்கள்.
இந்த 21 நாட்களுக்கு யார் மீதும் குற்றம் செலுத்த வேண்டாம். யார் பற்றியும் புறம் பேச வேண்டாம். இப்படி செய்வது ஒருவிதமான எதிர்மறையான எண்ணத்தை கொடுக்கும். அதனால் அதை தவிர்க்கவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -