Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Broccoli Cheese Balls: சுவையான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:,உருளைக்கிழங்கு - 4 , ப்ரோக்கோலி - 1 கிண்ணம், வெங்காயம் - 1 நறுக்கியது, பூண்டு - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி ஃப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, இத்தாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரட் தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, எண்ணெய், சீஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து மசித்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்
அடுத்தது, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது பிரட் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதன்பிறகு உள்ளங்கையில் எண்ணெய் தடவி ப்ரோக்கோலி கலவையை உருண்டை பிடிக்க தயார் செய்து கொள்ளவும்.
ப்ரோக்கோலி உருண்டை நடுவிலும் சீஸ் கட்டிகளை வைத்து உருண்டை பிடித்து பிரட் தூளில் பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .
கடைசியாக ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமான சூட்டில் ப்ரோக்கோலி உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -