Semiya Kesari: நவராத்திரி ஸ்பெஷல்; புதுமையான சேமியா கேசரி ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் சேமியா - 1 கப் (250 மி.லி கப்) தண்ணீர் - 2 1/2 கப் கேசரி கலர் - 1 சிட்டிகை சர்க்கரை - 3/4 கப் ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி திராட்சை - 1 மேசைக்கரண்டி நெய் - 5 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கடாயில் நெய் ஊற்றி, சேமியாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதே கடாயில் மீண்டும் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவைக்கவும். சேமியா பாதி வெந்ததும் கேசரி கலர் சேர்க்கவும்.
சேமியா முழுமையாக வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
சேமியா கெட்டியானதும் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். இறுதியாக நெய் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும். அருமையான சேமியா கேசரி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -