இனிப்பு சாப்பிடணும் போல இருக்கா? திருநெல்வேலி ஸ்பெசல் திரிபாகம் ரெசிபி இதோ!
திருநெல்வேலி திரிபாகம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சமையலில் அறையில் உள்ள பொருட்களை வைத்து குறைந்த நேரத்தில் செய்துவிடலாம். இதோ திரிபாகம் ரெசிபி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎன்னென்ன தேவை? கடலை மாவு – 1 கப் காய்ச்சாத பால் – 1 கப் சர்க்கரை – 2 கப் முந்திரி - அரை கப் (பொடித்தது அல்லது மிக்ஸியில் கொரகொரப்பான பதத்தில் அரைத்தது ) குங்குமப்பூ – சிறிதளவு பச்சை கற்பூரம் – மிளகு அளவு
பாலில் குங்குமப்பூவைப் போட்டு கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சல்லித்த கடலை மாவைப் பாலில் கொட்டி, கட்டி விழாத பதத்துக்குக் கரைக்க வேண்டும். கொரகொரப்பாகப் பொடித்த முந்திரியை எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் கடலைமாவு - பால் கரைசலை கொட்டி நன்றாக கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். கடலை மாவு கலவை இறுகிவரும்போது, சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்ததும் கலவையில் அளவு அதிகரிக்கும். குறைந்த தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். கலவை இறுகிவரும்போது, சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பொடித்த முந்திரியையும், கையால் பொடித்த பச்சைக் கற்பூரத்தையும் இனிப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் சேர்க்க வேண்டும். 20 நிமிடங்களில் சுவையான திரிபாகம் தயார்.
திரிபாகம் நன்றாக வரவேண்டுமெனில் குறைந்த தீயில் மட்டும் இதை செய்ய வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் மட்டும் செய்யவேண்டும். தொடர்ந்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருப்பதுதான் முக்கியம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -