Creamy Chicken Pasta: க்ரீமியான சிக்கன் பாஸ்தா- எளிதான செய்முறை இதோ!
பாஸ்தா - 1 1/2 கப் சிக்கன் - 100 கிராம் இத்தாலியன் சீசனிங் - 3 தேக்கரண்டி பூண்டு தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 பூண்டு காய்ந்த மிளகாய் சிதறல்கள் - 2 தேக்கரண்டி அரைத்த தக்காளி - 2 கப் மொஸெரெல்லா சீஸ் - 150 கிராம் கிரீம் - 1/2 கப் எண்ணெய் உப்பு மிளகு துளசி இலைகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் பாஸ்தாவை வேக வைத்து தனியே வைக்கவும்.ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் பாஸ்தா, உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்
. அடுத்து கடாயில் எண்ணெய், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன், சிறிதளவு உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
சிக்கன் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும் அதே கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் சிதறல்கள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
இதோடு அரைத்த தக்காளி விழுது, வேகவைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம், வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும் இறுதியாக துளசி அல்லது திருநீற்றுப்பச்சிலை சேர்த்து இறக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -