Sago Sarbath:சுவையான ஜவ்வரிசி சர்பத் செய்வது எப்படி?இதைப் படிங்க!
தேவையான பொருட்கள்: ஜெல்லி துகள்கள் - 1 பாக்கெட், தண்ணீர் - 400 மி.லி, ஜவ்வரிசி - 1 கப் (250 மி.லி) , ஜெல்லி துண்டுகள், பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது, சர்க்கரை - 1/4 கப், ரோஸ் சிரப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து ஜெல்லி துகள்கள், தண்ணீர் சேர்த்து கரைத்து ஜெல்லியாக மாறும்வரை காத்திருக்கவும். ஜெல்லி தயாரானதும் எடுத்து ஆறவிடவும். ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். அதில் கால் கப் சாக்கரை, கொஞ்சம் ரோஸ் சிரப் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதன் பின் வேகவைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலக்கவும். ஃபிரிட்ஜ்ல் இரண்டு மணி நேரம் குளிர வைக்கவும். கடைசியாக ஜெல்லி துண்டுகளை சேர்த்தால் சுவையான ஜவ்வரிசி சர்பத் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -