Afghani Chicken Recipe: ஆப்கானி சிக்கன் எப்படி செய்வது? ரெசிபி இதோ!
முதலில் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅரைத்த மசாலா விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தயிர், பிரெஷ் கிரீம், கரம் மசாலா தூள், உப்பு, சாட் மசாலா தூள், மிளகு தூள், கசூரி மேத்தி, எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்து சிக்கனை கீறி அதில் கலந்த மசாலாவை சிக்கனில் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 15 நிமிடம் பொரித்து எடுக்கவும்.
அதே கடாயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்க்கவும்
மீதம் உள்ள மசாலாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். ஆப்கானி சிக்கன் தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -