Rosh Bora : பெங்காலி ஸ்பெஷல் ஸ்வீட் ரோஷ் போரா.. பண்டிகை நாளில் செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : சர்க்கரை - 1 கப் , தண்ணீர் - 1 1/2 கப், நெய் - 1 தேக்கரண்டி, ரவை - 1/2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 1 1/2 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி , பேக்கிங் சோடா - 1 சிட்டிகை , பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், அதில் ரவை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். அதன் பின் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து மிதமான தீயில் கிளறிவிடவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
அடுத்தது ரவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, பால் பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது பிசைந்த மாவை உருண்டை பிடித்து வட்டமாக தட்டிக்கொள்ளவும். அதன் பின் கடாயில் எண்ணெய் உருட்டி சூடானதும் உருட்டிய மாவை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது பொரித்த ரோஸ் போராவை சர்க்கரை பாகில் நிமிடம் ஊறவைத்து எடுத்தால் சுவையான ரோஸ் போரா தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -