Kollu Saatham : சத்துமிக்க கொள்ளு சாதம்.. குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
தேவையான பொருட்கள்: கொள்ளு - 125 கிராம், பச்சரிசி - 1 கப் ( 250 கிராம் ), எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 , பூண்டு - 10 பற்கள், பச்சை மிளகாய் - 3 , உப்பு , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, தக்காளி - 3, கறிவேப்பில்லை , கொத்தமல்லி இலை, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் கொள்ளு பருப்பை 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் அதில் கடலைபருப்பு, கடுகு, சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அடுத்தது பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள். கொத்தமல்லி தூள் சேர்த்து, நன்கு கிளறிவிடவும். அதன் பின் ஊறவைத்த கொள்ளு பருப்பு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்.
அடுத்தது 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசியை சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடிவைத்து 2 விசில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான கொள்ளு சாதம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -