Rose Milk Pudding : குளு குளு ரோஸ் மில்க் புட்டிங் ...இப்படி செய்து அசத்துங்க!
அனுஷ் ச | 10 Sep 2024 04:00 PM (IST)
1
தேவையான பொருட்கள்: முழு கொழுப்புள்ள பால் - 500 மி.லி, சர்க்கரை - 1/4 கப், ரோஸ் சிரப் - 4 மேசைக்கரண்டி, சோளமாவு - 1/4 கப், பால் - 1/4 கப் காய்ச்சி ஆறவைத்தது, ரோஸ் கலர் - 2 சொட்டுகள், வெண்ணெய்.
2
செய்முறை : ஒரு பாத்திரத்தில் சோளமாவு, காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கட்டியாகாமல் கிளறவும்.
3
அடுத்தது பாலில் ரோஸ் கலர் சேர்த்து நன்கு கலக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4
அடுத்தது மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்த்து கலந்துவிடவும்.
5
அடுத்தது தயார் செய்த சோளமாவு கலவையை சேர்த்து பால் கெட்டி ஆகும் வரை கலக்கவும்.
6
கடைசியாக வெண்ணெய் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். அதன்பிறகு 2 மணிநேரம் குளிரூட்டி ரோஸ் சிரப்பை புட்டிங் மீது ஊற்றி பிஸ்தாவை தூவிவிட்டு பரிமாறினால் சுவையான ரோஸ் மில்க் புட்டிங் தயார்.