Green Peas Rice:சுவையான பச்சை பட்டாணி சாதம்..தேங்காய் பால் சேர்த்து செய்து அசத்துங்க!
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பட்டை துண்டு, 4 லவங்கள், சிறிய துண்டு ஜாதி பத்திரி, இரண்டு ஸ்பூன் சோம்பு, 4 பச்சை மிளகாய், ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, 10 சிறிய வெங்காயம், ஒரு கைப்பிடி புதினா இலைகள், சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து இதில் மிக குறைவாக தண்ணீரி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்க்கவும். சூடானதும், இரண்டு பிரிஞ்சி இலை, ஒரு அன்னாசி பூ, இரண்டு ஏலக்காய், நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கண்ணாடிப்பதம் வந்ததும் அரைத்த மசாலா விழுதை இதனுடன் சேர்க்கவும்.
தீயை மிதமாக வைத்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட வேண்டும். பின் ஊற வைத்துள்ள பச்சை பட்டாணியை தண்ணீரை வடிகட்டி விட்டு மசாலாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஊறவைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்க்க வேண்டும். இதில் ஒரு கப் தேங்காய் பால், இரண்டரை கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு உப்பை சரி பார்க்க வேண்டும்
. இப்போது குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -