Mutton Curry : காரசாரமான காய்ந்த மிளகாய் மட்டன் குழம்பு ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ, வெங்காயம் - 5 நறுக்கியது, காய்ந்த மிளகாய் - 9 , புளி தண்ணீர் - 1 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், இலவங்கப்பட்டை - 1, கிராம்பு- 2 , ஏலக்காய்- 3, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மட்டன் மசாலா தூள் - 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் விதைகள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை
செய்முறை: 1. அடுப்பில் கடாயில் வைத்து எண்ணெய் சூடானதும், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மட்டன் மசாலா , பெருஞ்சீரகம், சீரகம், கொத்தமல்லி தூள் சேர்த்து கிளறிவிடவும். அதன்பிறகு இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறிவிடவும்
அடுத்தது மட்டன் துண்டுகள், உப்பு சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து கொள்ளவும். மட்டன் துண்டுகளில் மசாலா இறக்கியதும் அதனை குக்கரில் மாற்றவும். குக்கரில் 5 விசில் வைத்து வேகவைக்கவும்.
அதன்பிறகு காய்ந்த மிளகாவை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து விதையை நீக்கி அரைத்து கொள்ளவும். அந்த மிளகாய் துவையலை புளி கரைத்த தண்ணீரில் மிக்ஸ் வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் இருக்கும் மட்டன் துண்டுகளை கடாயில் மாற்றி புளி கரைத்து வைத்துள்ள தண்ணீர், உப்பு சேர்த்து கிளறிவிட்டு 10 முதல் 15 முதல் வேகவைக்கவும். கடைசியாக கறிவேப்பிலை இலை சேர்த்து இறக்கினால் சுவையான காய்ந்த மிளகாய் மட்டன் குழம்பு தயார்.