Red Bean Gravy : மணக்க மணக்க காராமணி கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : சிவப்பு காராமணி - 250 மிலி, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்,வெங்காயம் - 2 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 , தக்காளி விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரகப் பொடி - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி, ஆம்சூர் பொடி - 1 தேக்கரண்டி, தண்ணீர், கரம் மசாலா - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் சிவப்பு காராமணியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு அதை பிரஷர் குக்கரில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருஞ்சீரகம், சோம்பு,பட்டை ஏலக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சாறு சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை கொதிக்கவிடவும். அதன் பிறகு உப்பு, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள்,மல்லி தூள், ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்தது வேகவைத்த காராமணியை தண்ணீரோடு மசாலாவில் சேர்த்து மிக்ஸ் செய்து நன்கு கிளறிவிடவும். கிரேவி கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
அதன்பிறகு கடாயை மூடி போட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும். கடைசியாக கரம் மசாலா சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் மணக்க மணக்க காராமணி கிரேவி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -