Bonda Soup : போண்டாவில் சூப் செய்யலாமா? என்ன சொல்றீங்க?
தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பூண்டு , பச்சை மிளகாய் - 5 , தக்காளி - 2 நறுக்கியது, தண்ணீர் , எலுமிச்சைபழம் சாறு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை , உளுத்தம் பருப்பு - 1 கப், உப்பு , சமையல் சோடா, தேங்காய் - 1/4 கப் நறுக்கியது, கறிவேப்பிலை, எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் பாசி பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு பிரஷர் குக்கரில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு தூள் பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும். அதன் பிறகு நறுக்கிய இஞ்சி, பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்தது தக்காளி, உப்பு சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அதன் பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அடுத்தது சூப்க்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். அடுத்ததுஎலுமிச்சை பழம் சாறு, கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்தது ஊறவைத்த உளுந்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதில் நறுக்கிய தேங்காய், பச்சைமிளகாய், உப்பு, சமையல் சோடா, கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போண்டா மாவை உருண்டை பிடித்து எண்ணெயில் போட்டு போண்டாவை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக பொரித்த போண்டாவை சூப்பில் சேர்த்து பரிமாறினால் சுவையான போண்டா சூப் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -