Ragi Kanji : காலையில் டீ, காபிக்கு பதில் இந்த ராகி கஞ்சி குடிக்கலாம்!
தேவையான பொருட்கள் : ராகி மாவு - 1/4 கப், தண்ணீர் - 250 மிலி, கெட்டியான தயிர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் - 2 எண்கள், கொத்துமல்லி இலை, உப்பு - 1 டீஸ்பூன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ராகி மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் தண்ணீரை வடிகட்டிய ராகி மாவை சேர்க்கவும்.
அடுத்தது ராகி மாவை 15 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கிளறிவிடவும்.
15 நிமிடத்திற்கு பிறகு, ராகி கலவையை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். அதன்பின் கெட்டியான தயிர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கஞ்சி கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ராகி கஞ்சி தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -