Aloo Methi : பஞ்சாபியர்களுக்கு பிடித்த அருமையான ஆலூ மேத்தி..ஒருமுறை செய்துதான் பாருங்க!
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 6 , வெந்தய கீரை - 1 கட்டு, எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது , பூண்டு - 12 பற்கள் இடித்தது , தக்காளி - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி , தனியா தூள் - 1 தேக்கரண்டி , கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, ஆம்சுர் பவுடர் - 1 தேக்கரண்டி , சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது நறுக்கிய உருளைக்கிழங்கு, இடித்த பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
அடுத்தது பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து மீண்டும் 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
கடைசியாக கரம் மசாலா, ஆம்சுர் பவுடர், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான ஆலூ மேத்தி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -