Chocolate Cookies: பிரஷர் குக்கரில் எளிதாக குக்கீஸ் செய்யலாம் - இதோ ரெசிபி!
குழந்தைகளுக்கு குக்கிஸ் ரொம்பவும் பிடிக்கும் என்பவர்கள் அதை வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். அதற்கு மைக்ரோவேவ் ஒவன் வேண்டும் என்றில்லை. பிரஷர் குக்கரில் செய்து கொடுக்கலாம். இதை தயாரிக்க கோதுமை மாவு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎன்னென்ன தேவை?மைதா - 1 1/2 கப் கோகோ பவுடர் - 1/4 கப் உப்பு - 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் சர்க்கரை - 1/2 கப் பிரவுன் சுகர் - 1/2 கப் முட்டை - 1 வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி வால்நட்ஸ் - 1 கப் சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப் அலுமினியம் ஃபாயல் கல் உப்பு - சிறிதளவு.
பாத்திரத்தில், மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.அடுத்து உப்பில்லாத வெண்ணை, பிரவுன் சுகர், வெள்ளை சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும். அடுத்து இதில் ஒரு முட்டை சேர்த்து பீட் செய்யவும். பின் இதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். மைதா கலவையை இதனுடன் சேர்த்து கிளறவும்.
இதை வால்நட்ஸ் துண்டுகள் மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.பிரஷர் குக்கர்'ரில் அலுமினியம் பேப்பர் போட்டு கல்லுப்பு போடவும்.
குக்கர்'ரை மூடி 10 நிமிடம் சூடாக்கவும். செய்த குக்கீஸ் கலவையை சிறிய வடை போல் தட்டி தட்டில் வைத்து குக்கர்'ரில் வைக்கவும். 15 நிமிடம் குக்கீஸை வேகவைக்கவும். பிரஷர் குக்கர் வால்நட்ஸ் சாக்லேட் குக்கீஸ் இப்போ தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -