Schezwan Noodles: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் செஸ்வான் நூடுல்ஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ், எண்ணெய் - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் , வெங்காயம் - 1, கேரட் - 1 கப், பச்சை குடமிளகாய் - 1 கப், சிவப்பு குடமிளகாய் - 1 கப், முட்டைக்கோஸ் - 1 கப், காளான் - 1 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன் , சோயா சாஸ் - 1 டீஸ்பூன், செஸ்வான் சாஸ் - 3 டீஸ்பூன், வெங்காய தாள்,தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநூடுல்ஸை தண்ணீரில் 5-7 நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் . நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பெரிய தட்டில் பரப்பி விடவும்.
ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும். நறுக்கிய பூண்டு, இஞ்சி பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
அடுத்தது, கேரட், பச்சை குடமிளகாய், சிவப்பு குடைமிளகாய், துருவிய முட்டைக்கோஸ், நறுக்கிய காளான்கள் சேர்த்து 1-2 நிமிடம் மீதமான சூட்டில் வைத்து வதக்கவும்.
அடுத்தது தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், ஷெஸ்வான் சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சமைத்த நூடுல்ஸை சேர்த்து காய்கறிகள் மற்றும் சாஸ்களுடன் ஓன்று சேரும் அளவிற்கு கிளறிவிடவும்.
கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து மிக்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான செஸ்வான் நூடுல்ஸ் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -