Prawn Masala:சுவையான இறால் டிக்கா மசாலா எளிதாக செய்யலாம்; இதோ ரெசிபி!
ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். இறாலை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றவும். அது உருகியதும். ஊறவைத்த இறாலை அதில் கொட்டி 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும். பின்னர் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் சீரகத்தை போட்டு பொரிய விடவும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். அது நன்றாக பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்.
அதன்பின்னர் வெங்காயத்தின் மீது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியனவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கவும். நன்றாக மனம் வரும்வரை வதக்கவும். தக்காளி பியூரி செய்யவும். அதையும் கடாயில் சேர்க்கவும்.
பின்னர் மிதமான சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேகவிடவும். அடுத்ததாக க்ரீம், தயிர், கரம் மசாலா ஆகியனவற்றை சேர்க்கவும்.
இந்தக் கலவை எல்லாம் பச்சை வாடை போகும் அளாவுக்கு வெந்த பின்னர் வேகவைத்த பிரான்ஸ் மற்றும் தந்தூரி மசாலா தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ப்ரான் டிக்கா தயார். நான் ரோட்டி அல்லது சூடான சாதத்துடன் பறிமாறலாம்.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -