Health Tips:மழை காலத்தில் குடல் ஆரோக்கியம் மேம்பட பூஸ்டர் ட்ரிங்; ஆயுர்வேத டிப்ஸ்!
ஒவ்வொரு பவரு காலத்திற்கும் ஏற்றவாறு உணவு சாப்பிட வேண்டும். பருவ காலங்களுக்கு ஏற்ப உடல்நிலை மாறுபடும். அதற்கேற்றவாற்ய் சாப்பிட வேண்டும். பொதுவாகவவே மழை, குளிர்காலத்தில் வெப்பம் குறைவாக இருப்பதால் செரிமான மண்டலம் சீராக செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால், எளிதாக செரிமான ஆககூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமழை காலத்தில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை காணலாம். மழை காலத்தில் சீரகம், பட்டை, சோம்பு, கிராம்பு, புதினா, துளசி, ஓமம், மல்லி உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்ள்ள வேண்டும். காரம் நிறைந்த மசாலாப் பொருட்களை அதிகம் சாப்பிடக் கூடாது. எண்ணெய் அதிகம் இருக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
பச்சை காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.வேக வைத்து சாப்பிட வேண்டும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
சாப்பிடத்தும் ஓமம் சாப்பிடுவது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது உள்ளிட்ட பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் kadha தண்ணீர், டீ செய்து குடிப்பது நல்லது. இதை தயாரிக்க இரண்டு கப் தண்ணீரில் ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு, 4-5 கிராம்பு, 5-6 கருப்பு மிளகு, 5-6 துளசி இலைகள், சிறிய அளவிலான பட்டை ஆகியவற்றை நன்றாக கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் ஒரு கப்பாக மாறும் வரை கொதிக்கவிட்டு வடிக்கட்டி தேன் கலந்து குடித்து வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
image 6
- - - - - - - - - Advertisement - - - - - - - - -