Prawn Kola Urundai : இறாலில் கோலா உருண்டையா? இது புதுசா இருக்கே!
தேவையான பொருட்கள் : இறால் - 500 கிராம், உப்பு, மிளகு, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் - 1 மேசைக்கரண்டி, முட்டை - 1 , சோள மாவு - 2 மேசைக்கரண்டி , பிரட்தூள் - 1/4 கப், எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் இறாலை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இறால், உப்பு,மிளகு தூள், சோயா சாஸ், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் அரைத்து விழுதாய் சேர்த்து நக்கி பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது இந்த கலவையில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி அதில் சோள மாவு மற்றும் பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது இறாலை உருண்டை பிடித்து பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும். அதன் 20 நிமிடம் இறால் உருண்டைகளை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான இறால் கோலா உருண்டை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -