Peanut Laddu : வெறும் மூன்று பொருட்கள் போதும்.. வேர்க்கடலை லட்டு செய்யலாம்!
அனுஷ் ச | 02 Sep 2024 10:39 AM (IST)
1
தேவையான பொருட்கள் : வேர்க்கடலை - 500 கிராம், வெல்லம் - 1/2 கப் , ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.
2
செய்முறை : ஒரு கடாயில், வேர்க்கடலையை சிவக்க வறுக்கவும். வேர்க்கடலை வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
3
ஆறியதும் தோலை நீக்கி வறுத்த வேர்க்கடலையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
4
வேர்க்கடலை பாதி அரைபட்டதும், வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
5
வெள்ளத்தோடு சேர்த்து அரைக்கும் போது மாவு ஈரப்பதமாகதான் இருக்கும். அதன் பின் வேர்க்கடலையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சின்ன சின்ன உருண்டை பிடித்தால் சுவையான வேர்க்கடலை லட்டு தயார்