Spicy Food:காரசாரமான உணவுதான் என் ஃபேவரைட் என்கிறீர்களா? நிபுணர்கள் சொல்வதை கவனிங்க!
காரமாக சாப்பிடும்போது அது நமது வயிற்றின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அறிவதில்லை. இதனால் நமது வயிற்றுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
காரசாரமான உணவை அடிக்கடி அதிகப்படியாக சாப்பிட்டால் அதனால் உடலில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மிளகாயில் கபாசிஸின் என்ற மூலப் பொருள் உள்ளது. இது நாவில் உள்ள சுவையுணர்வை தூண்டுகிறது. அதனால் காரசார உணவு மீது ஈர்ப்பு வருகிறது. அது மட்டுமல்லாமல் அதை சாப்பிட்டவும் தொண்டை எல்லாம் எரியும் தன்மை ஏற்படுகிறது. அதிகளவு காரம் சாப்பிடுவதால் இதய துடிப்பு அதிகரிக்கும். உடல் சூடு குறையும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும். கபாசிஸின் என்ற மூலப் பொருள் காஸ்ட்ரின் ஹார்மோன் சுரப்பதை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பதும் அதிகரிக்கும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ், இன்னும் பிற கேஸ்ட்ரோ இண்டஸ்டினல் தொந்தரவுகள் ஏற்படும்.
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகாய்தூள், கருப்பு மிளகு உள்பட காரமான மசாலா பொருட்களை கொண்டுதான் இந்திய உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.அளவோடு சாப்பிடுவது நல்லது.
கார உணவுகளை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.