Onion Masala : சுவையான வெங்காய மசாலா செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, தக்காளி - 2 நறுக்கியது , பூண்டு - 7 பற்கள், சின்ன அளவு வெங்காயம் - 22 , சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, கருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி , தயிர் - 1/2 கப் , கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி
செய்முறை: முதலில் தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது, கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதன் பிறகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிட்டு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும். அதன்பிறகு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அடுத்தது தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.
தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு கடாயை மூடி 5 நிமிடம் கொதிக்கவிடவும். அடுத்தது கரம் மசாலா தூள், கசூரி மேத்தி சேர்த்து கிளறிவிட்டு, வதக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான வெங்காய மசாலா தயார்.