Cooking Tips : ஒரு முறை ஆம்லெட்டை இந்த மாதிரி செய்து பாருங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
அனுஷ் ச | 12 Jul 2024 02:53 PM (IST)
1
பச்சை பட்டாணி வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் பட்டாணி சுவையாக இருக்கும்.
2
பூரி மாவு பிசையும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி நீண்ட நேரம் உப்பலாக இருக்கும்.
3
தக்காளி, கேரட், பீட்ரூட் மூன்றையும் சேர்த்து அடை மாவுடன் அரைத்து அடை செய்தால் டேஸ்ட் அற்புதமாக இருக்கும்.
4
இடியாப்பம் மாவு பிசையும் போது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து இடியாப்பம் செய்தால் சாப்டாக இருக்கும்.
5
வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்து செய்தால் பஜ்ஜி அட்டகாசமாக இருக்கும்.
6
ஆம்லெட் செய்யும் போது பச்சை மிளகாய்க்கு பதிலாக குடைமிளகாய் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.