Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Beetroot Egg Fry : சுவையான பீட்ரூட் முட்டை பொரியல் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 3 நறுக்கியது, முட்டை - 5 , நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , பூண்டு - 8 பற்கள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 நறுக்கியது, தண்ணீர் - 1/2 கப், எண்ணெய் - 3 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகு - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு, கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
அந்த கலவையில் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
அதே கடாயில் முட்டை உடைத்து ஊற்றவும். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பீட்ரூட்டுடன் சேர்த்து கிளறிவிடவும்.
முட்டை வெந்தவுடன் இறுதியாக கொத்தமல்லி இலை அடைப்பை அனைத்து இறக்கினால் சுவையான பீட்ரூட் முட்டை பொரியல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -