Oats Omelette: ஆரோக்கியமான ஓட்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
3 டீஸ்பூன் ஓட்ஸை மூழ்கும் அளவு பால் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையே ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், துருவிய ஒரு கேரட், மிளகுத்தூள் அரை ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் 1, நறுக்கிய குடை மிளகாய் ஒரு ஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு, நறுக்கிய ஒரு சிறிய தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து
பாலில் ஊற வைத்த ஓட்ஸை இதனுடன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பேன் -ஐ அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டையை இதில் ஊற்ற வேண்டும். வழக்கமான அம்லெட் போல் இதை திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் ஆம்லெட் தயாராகி விட்டது. இதை சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -