✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kitchen Tips:கீரையை எப்படி சமைக்க வேண்டும்? பயனுள்ள சில சமையல் குறிப்புகள் இதோ!

ஜான்சி ராணி   |  24 Oct 2024 12:42 PM (IST)
1

உருளைக்கிழங்கை நாம் சமைப்பதற்கு வெட்டிய உடன் அது கருத்து விடும் என்பதால் வெட்டிய உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைப்பது வழக்கம். தண்ணீரில் போட்டு வைத்தாலும் 10 நிமிடத்திற்கு மேல் தண்ணீரில் இருந்தால் உருளைக்கிழங்கு சில நேரங்களில் கருத்து விடும். அப்படி கருக்காமல் இருக்க உருளைக்கிழங்கை ஊற வைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்தால் அரை மணிநேரம் ஆனாலும் உருளைக்கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும். 

2

மக்ருணி, சேமியா, உப்மா போன்றவை சமைக்கும்போது அதில் காரம் அதிகமாகிவிட்டால் இரண்டு ஸ்பூன் அளவு அதில் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டால் காரம் குறைந்து விடும். இல்லையென்றால் இதற்கு பதில் தயிர் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சேர்த்தாலும் காரம் குறைந்து விடும். 

3

நாம் பாட்டில் அல்லது டப்பாவில் உப்பு ஸ்டோர் செய்து வைக்கும்போது சில நாட்களிலேயே உப்பு தண்ணீர் விட்டு நீர்த்துவிடும். இப்படி ஆகாமல் உப்பு எப்போது ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால், உப்பு கொட்டி வைக்கும் டப்பாவில் கால் டீஸ்பூன் அளவு சோள மாவு சேர்த்து மாவு டப்பா முழுவதும் படும்படி குலுக்கிவிட்டு தடவிவிட்டு ( spread) செய்துகொள்ள வேண்டும்.

4

பின் கொட்டாங்குச்சியின் சிறு துண்டை எடுத்து அதன் மேல் உள்ள சிரட்டையை கத்தியால் நீக்கி விட்டு அதை டப்பாவின் அடியில் போட்டுக்கொள்ள வேண்டும். இப்போது இந்த டப்பாவில் உப்பு கொட்டி வைத்தால் உப்பு நீர்த்து போகாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். 

5

கடைகளில் இருந்து வாங்கும் கீரைகளில் பூச்சி அறிக்காமல் இருக்க அதிகம் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து இருப்பார்கள். எனவே இதை நாம் அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. எனவே கீரைகளை வெறும் தண்ணீரில் கழுவாமல், கீரையை கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து கீரை மூழுகும் அளவு அதில் தண்ணீர் சேர்த்து இதில் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, இதை 10 நிமிடம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நல்ல தண்ணீரில் ஒருமுறை கழுவி விட்டு சமைப்பது நல்லது. 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Kitchen Tips:கீரையை எப்படி சமைக்க வேண்டும்? பயனுள்ள சில சமையல் குறிப்புகள் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.