Oats Omelette : டயட்டில் உள்ளவர்களா நீங்கள்? ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : ஓட்ஸ் - 3 தேக்கரண்டி, பால் - 1 மேசைக்கரண்டி, முட்டை - 4 , வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 1 , வெல்லம் - 1 தேக்கரண்டி, துருவிய கேரட் - 2 தேக்கரண்டி, உப்பு, மிளகு, குடைமிளகாய், ஆலிவ் எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் சேர்த்து அதில் பாலை ஊற்றி ஊறவைக்கவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து சேர்க்கவும். அதன் பிறகு மிளகு, உப்பு, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
அடித்தது நறுக்கிய கேரட், குடைமிளகாய், பச்சமிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
அடுத்தது தக்காளி, கொத்தமல்லி , பாலில் ஊறவைத்த ஓட்ஸ் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
அடுத்தது பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் ஒரு நிமிடம் சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான ஓட்ஸ் ஆம்லெட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -