Nungu Paayasam : குளிர்ச்சியான நுங்கு பாயசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : நுங்கு துண்டுங்கள் - 15 , பால் - 1 லிட்டர், சர்க்கரை - 300 கிராம், ஏலக்காய் - 5 துண்டுகள், பாதம் பிஸின்- 3 துண்டுகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் பாதம் பிசினை ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பாயாசம் செய்ய நுங்கு தோலை நீக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும். அதில் 3 துண்டுகளை மட்டும் சின்னதாக நறுக்கிக்கொள்ளவும்.
அதன்பின், மீதம் உள்ள நுங்கு துண்டுகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்தது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து பால் மட்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
பால் கொதித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள நுங்கினை சேர்க்கவும் கலந்து விடவும், அடுத்தது ஏலக்காயை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு லிட்டர் பால் முக்கால் பாகத்திற்கு வரும்வரை காத்திருக்கவும்.
அடுத்தது, பாலில் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளை சேர்க்கவும். முதல் கொதி வந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
நுங்கு பாயசத்தை ஆறவிடவும். அதன்பின் பாதம் பிஸின் சேர்த்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைத்தால் குளிர்ச்சி தரும் நுங்கு பாயசம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -