Nilakadalai Podi : சட்னி அரைக்க சோம்பலாக இருந்தால் இந்த பொடியை அரைச்சு வச்சிக்கோங்க!
தேவையான பொருட்கள் : நிலக்கடலை - 250 கிராம் , கடலை பருப்பு - 4 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி, தனியா - 5 மேசைக்கரண்டி, சீரகம் - 2 மேசைக்கரண்டி , சிவப்பு மிளகாய் - 20 , புளி , பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி , கல் உப்பு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பானில் நிலக்கடலை சேர்த்து 10 நிமிடம் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது அதே பானில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
அதன் பின் தனியா, சீரகம், சிவப்பு மிளகாய், புளி, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
அடுத்தது அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தூள், கல் உப்பு, சேர்த்து ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற விடவும்.
ஆறவைத்த மசாலா கலவையை மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைக்கவும். அடுத்து வறுத்த நிலக்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் அருமையான நிலக்கடலை பொடி தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -