Muttai Semiya Pulao : சுவையான சேமியா முட்டை புலாவ்.. இப்போதே செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள் : நெய், சேமியா- 250 மில்லி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் - 1 , பச்சை மிளகாய் - 2 , கேரட் - 1 , பீன்ஸ் - 3 , பச்சை பட்டாணி - 1 மேசைக்கரண்டி, தக்காளி - 1 , இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி, உப்பு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர், எண்ணெய் , முட்டை - 4 , மிளகு தூள், மிளகாய் தூள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தது முட்டையை பானில் சேர்த்து பொரியல் போல வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது மீண்டும் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை,பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அடுத்தது பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அதன்பின் உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன் வறுத்த சேமியா சேர்த்து காய்கறியுடன் கிளறிவிடவும். அதன் பின் மூடி வைத்து 5 நிமிடம் சேமியாவை வேகவைக்கவும்
அடுத்தது வறுத்து வைத்துள்ள முட்டையை, சேமியாவோடு சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சேமியா முட்டை புலாவ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -