Milagu Sadam : மதிய வேளை சாப்பாட்டிற்கு மிளகு சாதம் கட்டிக்கொடுத்து பாருங்க.. திரும்ப திரும்ப கேப்பாங்க!
தேவையான பொருட்கள் : மிளகு - 1 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, முந்திரி பருப்பு , பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, பூண்டு நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 கீறியது , கறிவேப்பிலை, உப்பு, வடித்த சாதம் , பொடித்த மிளகு சீரக தூள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.
அடுத்தது மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பின் உப்பு அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்தது வேகவைத்த சாதத்தை மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறினால் சுவையான மிளகு சாதம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -