Mor Kulambu : சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, தனியா - 1 தேக்கரண்டி, சீரகம் - 3 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி, தயிர் - 1 கப், எண்ணெய் - 3 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை , வெள்ளை பூசணிக்காய் - 200 கிராம் , உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர் , வெல்லம், கொத்தமல்லி இலை - நறுக்கியது
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சேர்த்து வறுக்கவும். அடுத்து தனியா, சீரகம் ,சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அதன்பின் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், துவரம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.அடுத்தது கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு பெருங்காயத்தூள், அடித்த தயிர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்தது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை வதக்கவும்.
அடுத்தது வெள்ளை பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும். அதன்பின் அரைத்த மசாலா விழுது, தண்ணீர், உப்பு, வெல்லம் சேர்க்கவும்.
மசாலாவை நன்கு கலக்கி விட்டு மீண்டும் 5 நிமிடம் மூடிய நிலையில் கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.