Kovakkai Fry : மதிய உணவிற்கு ஏற்ற கோவக்காய் பொரியல் செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 2 , பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கோவக்காய் - 250 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, வேர்க்கடலை - 1/4 கப், துருவிய தேங்காய் - 1/4 கப், சிவப்பு மிளகாய் - 6 , பூண்டு - 5 பற்கள் , பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அதில் துருவிய தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
தேங்காயை வறுத்த பிறகு ஆறவிட்டு மிஸ்சியில், பூண்டு, பொட்டுக்கடலை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய கோவைக்காயை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடிப்பிடக்காமல் 5 நிமிடம் வதக்கிய பிறகு கடைசியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கினால் சுவையான கோவைக்காய் பொரியல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -