Quesadilla Recipe : மெக்சிகன் கேஸிடியா.. ஸ்கூலுக்கு சென்று களைப்பாக வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
கேஸிடியா செய்ய தேவையான பொருட்கள் : மைதா - 2 கப், உப்பு - தேவையான அளவு, பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 6 மேசைக்கரண்டி, சூடு தண்ணீர், ஸ்வீட் சோளம் - 1 கப் வேகவைத்தது, வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, பச்சை குடைமிளகாய் பொடியாக நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி நறுக்கியது, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/4 தேக்கரண்டி, சீஸ் துருவியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து கலந்து பின்பு சிறிது சிறிதாக சூடு தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு 2 மணிநேரம் ஊறவிடவும். பின்பு சம அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சப்பாத்தி கட்டையில் மாவை தூவி உருட்டிய மாவை வைத்து மாவை தூவி மெல்லியதாக தேய்க்கவும்.
பின்பு தவாவை சூடு செய்து தேய்த்த மாவை அதில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும். இதுதான் டோர்டில்லா. இதை எடுத்து ஒரு துணியில் வைத்து மூடி வைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சுவீட் சோளம், வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகு தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தவாவில் எண்ணெய் தேய்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து டோர்டில்லாவை வைக்கவும்.பின்பு டோர்டில்லாவின் ஒரு பாதியில் துருவிய சீஸ், செய்து வைத்த காய்கறி கலவையை வைக்கவும்
அதன் மேல் துருவிய சீஸ் தூவி டோர்டில்லாவை மூடி மெதுவாக அழுத்திவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும். இருபக்கமும் வேக வேண்டும். அவ்வளவுதான் கேஸிடியா தயார். இதை கடையில் கிடைக்கும் சால்சாவுடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -