Diwali 2024 Date:தீபாவளி கொண்டாடப்படும் தேதி என்ன?பூஜை செய்ய நல்ல நேரம் எது?
நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளியும்’ (Diwali) ஒன்று. தீபாவளி நாளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு, உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர்.
இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
அக்டோபர் 31-ம் தேதி வியாழன் கிழமையன்று நல்ல நேரத்தில் இறை வழிபாடு செய்வது நல்லது. ராகு காலம் தவிர்த்து அன்றய நாளில் பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாடத்திற்கு பல கதைகள் சொல்லப்படுவதுண்டு. வால்மீகி ராமயணத்தின் படி, ராமர் ராவணனை வென்ற நாளாகும். ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியாவிற்கு திரும்பிய நாள், 14 ஆண்டுகளுக்குப் பின் ராமர் வனவாசம் முடித்து சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய நாள் - அதை வரவேற்க அயோத்தி நகர் முழுவதும் தீபங்கள் ஏற்றி வரவேற்றனர் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது.
மார்க்கண்டேய புராணத்தின்படி, பூமி இருளில் மூழ்கியிருந்தபோது வானத்தில் இருந்து பிரகாசமான ஒளி தென்பட்டது. தாமரை மீது அமர்ந்து லட்சுமி பூமியில் இருந்து அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. லட்சுமியின் ஒளி பூமி முழுவதும் பரவி வெளிச்சத்தை பரப்பியது என்று சொல்லப்படுகிவதுண்டு. லட்சுமி அவதரித்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.