Masala Idli : வெறும் இட்லி போர் அடிக்குதா? அப்போ இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க நல்லா இருக்கும்!
தேவையான பொருட்கள்: இட்லி - 6 , எண்ணெய், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 , சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன், இலவங்கப்பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். அதன் பிறகு வெங்காயம் பச்சை மிளகு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்தது தேவையான அளவு உப்பு, சாம்பார் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
5 நிமிடம் நன்கு வதக்கிய பிறகு, நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை மசாலாவுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து இறக்கினால் சுவையான மசாலா இட்லி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -