Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Beetroot Idli Fry Recipe: ஹெல்தியான பீட்ரூட் இட்லி ஃப்ரை எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!
பீட்ரூட் இட்லி ஃப்ரை செய்ய அரிசி, உளுந்தை முதலில் ஊற வைக்க வேண்டும். அரிசி, உளுந்து இரண்டையும் நன்றாக சுத்தப்படுத்தி 6-7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதோடு சிறிதளவு வெந்தயம் ஊற வைக்க வேண்டும். இவற்றை நன்றாக இட்லி மாவு போல அரைத்து எடுக்க வேண்டும். 7 மணி நேரத்திற்கு பிறகு பீட்ரூட் அரைத்து இந்த மாவோடு சேர்க்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போது, 2-3 பீட்ரூட்டை நன்றாக தோல் நீக்கி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
தேவையெனில் தண்ணீர் சேர்த்துகொள்ளலாம். இப்போது இட்லி பானையில் இந்த மாவில் இட்லி ஊற்றி வைக்கவும். பீட்ரூட் இட்லி வெந்ததும் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அடுத்து, ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், பெருங்காய தூள், உப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கவும்.
இந்த சமயத்தில், பீட்ரூட் இட்லி துண்டுகளை அதோடு சேர்த்து நன்றாக மொறுமொறுப்பான இருக்கும்வரை வதக்கவும். இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் பீட்ரூட் இட்லி ஃப்ரை தயார். இதற்கு தேங்காய், வேர்க்கடலை சட்னி உடன் சாப்பிடலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -