Chicken Curry: ருசியான மஹாராஷ்டிரியன் சிக்கன் க்ரேவி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் தனியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிக்ஸியில் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் தனியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். கொப்பரை தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின்பு ஆறவிடவும். மசாலா பொருட்கள் மற்றும் வதக்கி வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் இன்றி நன்கு விழுதாக அரைக்கவும்.
அடுத்து கடாயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு கொத்தமல்லி விழுது சேர்த்து வதக்கி பின்பு கீறிய பச்சை மிளகாய், துருவிய தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். சிக்கனில், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும். வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும். வதக்கிய மசாலாவை சேர்த்து கலந்து சூடு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும். மஹாராஷ்ட்ரியன் சிக்கன் கறி தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -