Madurai Thanni Chutney : மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள்: எண்ணெய் - 2 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 5 பற்கள், பச்சை மிளகாய் - 10 கீறியது, பொட்டு கடலை - 1/2 கப், உப்பு - 1 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, உளுந்து - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, அரைத்த சட்னி, தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பொட்டு கடலை, கல்லுப்பு சேர்த்து முதலில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அடித்தது பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுந்து, கடுகு சேர்க்கவும்.
கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, அரைத்த சட்னியை, மூன்று டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -