Burma Atho Recipe : வீட்டிலேயே பர்மா அத்தோ செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - 200 கிராம் , நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, துருவிய கேரட் - 1, துருவிய முட்டை கோஸ் - 1 கப், எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி , நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி , புளிச்சாறு - 1 மேசைக்கரண்டி, பூண்டு, எண்ணெய், கேசரி பொடி , வரமிளகாய் பிளேக்ஸ் , உப்பு, தண்ணீர், தட்டு வடை, கொத்தமல்லி இலை, உப்பு கலந்த தண்ணீர்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு கேசரி பொடியை சேர்த்து நூடுல்ஸை வேகவைக்கவும்.
அதைன்பின், வேகவைத்த நூடுல்ஸை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்தது, ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது, ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், எலுமிச்சை சாறு, புளிச்சாறு, வரமிளகாய் பிளேக்ஸ், தேவையான அளவு உப்பு கலந்த தண்ணீர், தட்டு வடை, கொத்தமல்லி இலை, பொறித்த பூண்டு, பொறித்த வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.
நூடுல்ஸ் உடன் சேர்த்த மசாலாவை நன்கு கலந்து விட்டால் சுவையான பர்மா அத்தோ தயார்.