Jigarthanda Recipe : வெளியிலுக்கு இதமான ஜிகர்தண்டா..எப்படி செய்யலாம்னு பாக்கலாம்!
தேவையான பொருட்கள் : பாதாம் பிசின், சர்க்கரை - 1 கப், தண்ணீர், பால் - 1 லிட்டர், பால் கோவா - 100 கிராம், சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரெஷ் கிரீம் -200 மில்லி, நன்னாரி சிரப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் பாதம் பிசினை எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். அடுத்தது, ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி கொள்ளவும்.
அடுப்பில், ஒரு பாத்திரத்தில் பாலுடன் பால் கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் சிறிதளவு பால் மட்டும் சோள மாவை கரைத்து, பால் கோவா கலவையுடன் கலந்து விடவும் .
காய்ச்சி வைத்த சர்க்கரை பாகையும் பிரெஷ் கிரீமையும் பால் கலவையில் சேர்த்து அதனை ஆற விட வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
ஒரு டம்ளரில் ஊறவைத்த பாதம் பிசின், நன்னாரி சிரப், சுண்டவைத்த பால், ஐஸ் கிரீம் சேர்த்து கலந்து கொடுத்தால் வெயிலுக்கு இதமான ஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -