Andhra Masala Idli : ஆந்திர ஸ்டைலில் காரசாரமான மசாலா இட்லி... ட்ரை பண்ணுங்க வித்தியாசமாக இருக்கும்!
தேவையான பொருட்கள் : இட்லி - 4 , எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 , நறுக்கிய குடை மிளகாய் - 1/2 , சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி , தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி, உப்பு, மிளகு தூள் , மிளகாய் தூள் வெங்காயத்தாள்.
செய்முறை: இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின் குடைமிளகாய் சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது தேவையான அளவு மிளகாய்த் தூள் உப்பு, மிளகு தூள் நன்கு கிளறிவிடவும்.
அடுத்தது பொரித்த இட்லி துண்டுகள், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திர மசாலா இட்லி தயார்.