Masala Noodles: மாலை நேர ஸ்நாக்ஸ்..சுவையான மசாலா நூடுல்ஸ் ட்ரை பண்ணுங்க- இதோ ரெசிபி!
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு உப்பு சேர்த்து ரமேன் நூடுல்ஸ்சை சேர்த்து வேகவிடவும்.சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் இன்றி வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்பு நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்துவிடவும். பிறகு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து வேகவைத்த நூடுல்ஸ்சை சேர்த்து கலந்துவிடவும்.
கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான மசாலா நூடுல்ஸ் தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -