Lemon Iced Tea Recipe:புத்துணர்ச்சி தரும் லெமன் ஐஸ் டீ ரெசிபி இதோ!
ர்க்கரை பாகு செய்ய, எலுமிச்சைப்பழத்தின் தோலை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து எலுமிச்சைப்பழத்தின் சாறை பிழிந்து வைத்து கொள்ளவும். ஒரு சாஸ் பானில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்ததும் எடுத்து வைத்த எலுமிச்சைப்பழத்தின் தோலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து விட்டு புதினா இலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.
லெமன் ஐஸ் டீ செய்ய, தண்ணீரை கொதிக்க வைத்து டீ தூள் சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும். டீ யை வடிகட்டி, இதனுடன் சர்க்கரை பாகையும் வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து விட்டு ஆறவிடவும்.
ஆறிய பிறகு எலுமிச்சைப்பழத்தின் சாறையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சைப்பழதுண்டுகள், புதினா இலை, லெமன் டீ ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து லெமன் ஐஸ் டீ யை ஜில்லென்று பரிமாறவும். சுவையாக இருக்கும்.