Javvarisi Bonda : ஜவ்வரிசியில் ருசியான போண்டா.. மாலையில் செய்து சாப்பிடுங்க!

தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி - 1 கப், தயிர் - 1 கப், தண்ணீர், வெங்காயம் - 1 நறுக்கியது , பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை , உப்பு - 1 தேக்கரண்டி , அரிசி மாவு - 1/2 கப், பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி, எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
செய்முறை : ஜவ்வரிசியை நன்கு கழுவி, தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்தது தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியுடன் நன்கு கலந்து கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
நான்கு மணி நேரம் கழித்து , நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்தது அரசி மாவு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டை பிடித்து எண்ணையில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ஜவ்வரிசி போண்டா தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -