Kathirikai Thuvayal : சூப்பர் சைட் டிஷ்.. இன்றே கத்திரிக்காய் துவையல் செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 1 கிலோ, தனியா - 1 மேசைக்கரண்டி , சீரகம் - 1 மேசைக்கரண்டி , எண்ணெய், தக்காளி - 4 நறுக்கியது, புளி, மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி, கல் உப்பு - 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம், எண்ணெய் - 3 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி , இடித்த பூண்டு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் - 2
செய்முறை: முதலில் கத்திரிக்காயை நறுக்கி உப்பு நீரில் வேக வைக்கவும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொத்தமல்லி, சீரகம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் சிவப்பு மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைத்து கொள்ளவும்.
கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்ததும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு புளி துண்டுகளை சேர்த்து வதக்கவும், அடுத்தது மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து அதன் பின்னர் ஆறவிடவும்
அடுத்தது ஆறவைத்த வறுத்த மிளகாவை மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்தது கத்திரிக்காய் கலவையை சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது நறுக்கிய சின்ன வெங்காயத்தை அரைத்த துவையலில் கலந்து விடவும். கடைசியாக எண்ணெயில், கடுகு, சீரகம், இடித்த பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து துவையலில் கலந்து மிக்ஸ் செய்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்.